வசூலில் 100 கோடியை கடந்த சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’!

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. குடும்ப உறவுகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம், வெளியான 2 நாட்களிலேயே ரூ.100 கோடி வசூலை கடந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் சூர்யாவுடன் மமிதா பைஜு, ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

ஆகஸ்ட் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படத்திற்கு பாடல்கள், டீசர் மற்றும் டிரெய்லர் வெளியானது முதலே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. தற்போது அந்த எதிர்பார்ப்பு வசூலாகவும் மாறியுள்ளது.

இந்நிலையில், ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் இரண்டு நாட்களில் ரூ.100 கோடி வசூலை எட்டியுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. சூர்யாவின் முந்தைய படமான ‘கருப்பு’ ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருந்த நிலையில், தற்போது ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படமும் வேகமாக வசூல் செய்து வருவது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

திரையரங்குகளில் தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால், இப்படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *