களமிறங்கிய லதா ரஜினிகாந்த்…
இந்திய திரையுலகின் பின்னணி பாடகியும்,தயாரிப்பாளருமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் ‘மக்கள் மேடை’ என்ற பெயரில் ஒரு புதிய மக்கள் இயக்கத்தைத் தொடங்கியுள்ளார். அவர், இதில் இணைய விரும்புவோர் 7550080515 என்ற அலைபேசி எண் அல்லது makkalmedaitn12@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலம் தொடர்புகொள்ளலாம் என அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் “மக்கள் மேடை-இது மக்கள் இயக்கம்! நம்தமிழகத்தின் வளர்ச்சிக்காகவும்,நன்மைகளுக்காகவும் ஒன்றிணைவோம்!
உங்களிடம் இருக்கும் ஆக்கப்பூர்வமான கருத்துக்கள்,அனுபவங்கள் மற்றும் திறமைகளை மக்கள் சேவைக்காக பயன்படுத்த ஒரு சிறந்த தளம்.அரசு அதிகாரிகள், ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற மூத்த குடிமக்கள்,இளைஞர்கள் என மாற்றத்தை விரும்பும் அனைத்து தரப்பு மக்களும் எங்களோடு கைகோர்க்கலாம். வாருங்கள்! ஒன்றாகச் சேர்ந்து, ஒரு பெரும் மக்கள் சக்தியாக உருவெடுத்து நல்ல பல காரியங்களைச் செய்வோம்! “
என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஒரு சாமானிய மனிதர் முதல் சமூகத்தின் பல்வேறு தரப்பினரின் யோசனைகளையும், மக்கள் சக்தியையும் ஒருங்கிணைப்பதே இதன் முதன்மை நோக்கமாகும்.இந்த இயக்கத்தின் மூலம் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காகவும், அந்தந்தத் தொகுதிகளின் முன்னேற்றத்திற்காகவும் உழைக்கக்கூடிய புதிய உள்ளூர் தலைவர்களை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. எனவும் லதா ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

