காதல் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ராஷ்மிகா மந்தனா!

காதல் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ராஷ்மிகா மந்தனா!

நடிகை ராஷ்மிகா மந்தனா, தன்னையும் விஜ்ஜுவையும் (Vijju) சுற்றி எழுந்துள்ள சர்ச்சைகள் குறித்து தனது கருத்தைப் பகிர்ந்துள்ளார். தங்களது நேர்காணலைச் சுற்றி எழுந்த விமர்சனங்கள், தேவையற்ற கருத்துகள் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த விவாதங்கள் வருத்தமளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

தங்களுக்குள் திருமணம் குறித்து உரையாடல் நடைபெற்றது உண்மைதான் என்றும், ஆனால் பிரம்மாண்டமான ப்ரொபோசல் அல்லது மோதிரம் அணிவிப்பது போன்ற விஷயங்களுக்கு இருவரும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். வாழ்க்கையின் ஏற்றத் தாழ்வுகளைப் புரிந்துகொண்டு, திருமணத்திற்கான சரியான நேரம் குறித்து இருவரும் சிந்திக்க அவகாசம் எடுத்துக்கொண்டதாகவும், இறுதியில் ஒருவரையொருவர் தேர்ந்தெடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

தனக்கு என்ன வேண்டும் என்பதில் தெளிவாக இருந்ததாகக் கூறிய ராஷ்மிகா, வாழ்க்கையின் நடைமுறைகளைச் சிந்தித்து முடிவெடுக்கத் தனது துணைக்கு நேரம் தேவைப்பட்டதிலும் தவறில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். திருமணம் என்பது வெறும் சடங்குகள் மட்டுமல்ல; ஒன்றாக இணைந்து எதிர்காலத்தையும் வாழ்க்கையையும் உருவாக்குவதே அதன் உண்மையான அர்த்தம் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், தான் திருமணம் செய்துகொள்ளவிருக்கும் நபரை ஆழமாகக் காதலிப்பதில் எந்தத் தவறும் இல்லை என்றும், வாழ்நாள் முழுவதும் அவருடன் இணைந்து பயணிக்க விரும்புவதாகவும் கூறியுள்ளார். தங்களது காதல் மற்றவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப இருக்க வேண்டிய அவசியமில்லை எனத் தெரிவித்த அவர், ஒவ்வொருவரும் தங்களது வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் காதலையும் தேடிக் கண்டடைய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இதை தொடர்ந்து விஜய் தேவர்க்கொண்டான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகை படத்தை பதிவிட்டுள்ளார்