சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து நியூசிலாந்து வீரர் ஓய்வு …

இந்திய ரசிகர்களால் ‘கேன் மாமா’ என அன்புடன் அழைக்கப்பட்ட நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.

நியூசிலாந்தின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான வில்லியம்சன், தனது 16 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்தை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளார்.நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சன், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து உடனடியாக ஓய்வு பெறுவதாக அறிவித்திருப்பது அவரது ரசிகர்களை மட்டுமின்றி அணைத்து கிரிக்கெட் ரசிகர்களையம் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஓய்வு குறித்து கேன் வில்லியம்சன் வெளியிட்டுள்ள பதிவில், ”சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறேன். இந்த முடிவை எடுப்பது எனக்கு கடினமாக இருந்தது. கடந்த சில காலமாக இது குறித்து நான் எண்ணியது உண்டு. ஆனால், கடந்த சில நாட்களாக இதுதான் சரியான நேரம் என கருதுகிறேன். நியூசிலாந்து அணிக்காக விளையாடிய ஒவ்வொரு கணமும் பொன்னானது. நியூசிலாந்து கிரிக்கெட்டின் எதிர்காலம் நல்ல கைகளில் இருக்கிறது என்று நான் முழுமையாக நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *