அண்ணன் வைபவ்… தம்பி ஆசிர்வாத்; சூர்யவன்ஷி குடும்பத்தில் இன்னொரு ரன் மெஷின்!
கிரிக்கெட் உலகில் 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி தொடர்ந்து சாதனை படைத்து வரும் வேளையில், அவரது 10 வயது தம்பியான ஆசிர்வாத் சூர்யவன்ஷி, பீகார் மாநிலத்தின் சமஸ்திபூர் மாவட்டத்தில் நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் அதிரடியாக விளையாடி சதம் அடித்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார்.
சமஸ்திபூரில் உள்ள தாஜ்பூர் கிரிக்கெட் அகாடமிக்காக விளையாடிய ஆசிர்வாத் சூர்யவன்ஷி, பயிற்சிப் போட்டியில் 87 பந்துகளை எதிர்கொண்டு 103 ரன்கள் குவித்தார். அவரது அண்ணன் வைபவ் சூர்யவன்ஷி போலவே பவுண்டரிகளை விளாசுவதில் ஆர்வம் காட்டிய அவர், தனது அதிரடி இன்னிங்ஸில் 20 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்சர் அடித்து அசத்தினார். தம்பியின் இந்த சிறந்த ஆட்டத்தின் ஸ்கோர்கார்டு புகைப்படத்தை வைபவ் சூர்யவன்ஷி அவரது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

