‘ஐ அம் கேம்’ மிகப்பெரிய படம்; பல சர்ப்ரைஸ்கள் காத்திருக்கின்றன – துல்கர் சல்மான்!

‘ஐ அம் கேம்’ மிகப்பெரிய படம்; பல சர்ப்ரைஸ்கள் காத்திருக்கின்றன – துல்கர் சல்மான்!

துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஐ அம் கேம்’ திரைப்படத்தை நஹாஸ் ஹிதாயத் இயக்கியுள்ளார். ஆண்டனி வர்கீஸ், மிஷ்கின், கயாடு லோஹர், கதிர், பார்த் திவாரி, சம்யுக்தா விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். RDX வெற்றிக்குப் பிறகு நஹாஸ் ஹிதாயத் இயக்கியுள்ள படம் என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சென்னை எம்.ஆர்.சி. நகரில் நடைபெற்ற படத்தின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய துல்கர் சல்மான், தமிழ் நடிகர்கள் மற்றும் தமிழ் வசனங்கள் அதிகம் இடம்பெற்றுள்ளதால் ‘ஐ அம் கேம்’ நேரடி தமிழ் திரைப்படம் போன்ற உணர்வை ரசிகர்களுக்கு ஏற்படுத்தும் என்றார்.

மேலும், இதுவரை தாங்கள் தயாரித்த படங்களிலேயே இதுவே மிகப்பெரியது என்றும், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தைப் போல இப்படத்திலும் பல சர்ப்ரைஸ்கள் இருப்பதாகவும் தெரிவித்தார்.

கதிர் சிறந்த நடிகர் என்றும், இயக்குநர் மிஷ்கின் படத்திற்கு மிகப்பெரிய பங்களிப்பை வழங்கியதோடு, தங்களுக்கு ஒரு குருவாக இருந்ததாகவும் துல்கர் குறிப்பிட்டார். மேலும், ரசிகர்கள் கொடுக்கும் பணத்திற்கு மதிப்பளிக்கும் வகையில் நல்ல திரைப்படங்களை வழங்குவதே தனது நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *