ஆம்ஸ்ட்ராங் கொ* வழக்கு: 10 பேருக்கு நேரடித் தொடர்பு – உச்சநீதிமன்றத்தில் சிபிஐ அறிக்கை!
பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் தமிழகத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், விசாரணையின் நிலை குறித்து மத்திய புலனாய்வுத் துறை (CBI) உச்சநீதிமன்றத்தில் விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 30 பேரில் 26 பேரிடம் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிபிஐ விசாரணையின் அடிப்படையில், அருள், பொன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, மணிவண்ணன், சிவா, விஜய், கோகுல் மற்றும் சந்தோஷ் ஆகிய 10 பேர் கொ*யில் நேரடியாக ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. மற்றவர்கள் ஆயுதங்கள் வழங்குதல், நாட்டு வெ*குண்டுகள் தயாரித்தல், நிதியுதவி அளித்தல் மற்றும் வாகனங்களை ஏற்பாடு செய்தல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டுகள் உள்ளன.
மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய நபர்களான செந்தில் மற்றும் மொட்டைக் கிருஷ்ணன் வெளிநாடுகளில் பதுங்கியிருக்கலாம் எனத் தகவல் கிடைத்துள்ளதாகவும், அவர்களின் வங்கிப் பரிவர்த்தனைகள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் சிபிஐ தெரிவித்துள்ளது.
கொ* நடைபெறுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு அஸ்வத்தாமன், அருள் மற்றும் திருவேங்கடத்தைச் சந்தித்தது தொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது. குற்றம் சாட்டப்பட்டவர்களின் தொலைபேசி அழைப்புகள், வாட்ஸ்அப் உரையாடல்கள், டிஜிட்டல் தரவுகள் மற்றும் வங்கிப் பரிவர்த்தனைகளும் ஆய்வு செய்யப்படுகின்றன.
சென்னை பெரம்பூரில் 2024 ஜூலை 5ஆம் தேதி ஆம்ஸ்ட்ராங் கொ*செய்யப்பட்டார். இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை நவம்பர் 3ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் நடைபெற உள்ளது. குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படும் வரை அவை குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளாகவே கருதப்படுகின்றன.
