“கட்சி மாற மாட்டாங்கன்னு என்ன நிச்சயம்?” – சீமான் சரவெடி!
மதுராந்தகம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தவெக வேட்பாளர் தொடர்பாக கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
மதுராந்தகத்தில் நடைபெற்ற பிரசாரத்தில் பேசிய சீமான், “இப்போது வெற்றி பெற்றுவிட்டு, மீண்டும் வேறு கட்சியில் சேர மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்? இதைவிட நல்ல வாய்ப்பு கிடைத்தால் அங்கு போய்விடுவார்கள்” என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், ஒரு கட்சியில் வெற்றி பெற்ற பிறகு பதவியை ராஜினாமா செய்துவிட்டு மற்றொரு கட்சியில் சேரும் அரசியல் நடைமுறையை விமர்சித்த அவர், “இதற்காகவே அவர்களை தோற்கடிக்க வேண்டும்” எனப் பேசியுள்ளார்.
மதுராந்தகம் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் கோ. ஜானகிராமன் போட்டியிடுகிறார். அக்டோபர் 6-ம் தேதி நடைபெற உள்ள இந்த இடைத்தேர்தலை முன்னிட்டு, சீமான் தொடர்ந்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
