இளையராஜா இசையில்… ஆஸ்கர் நோக்கி ‘கோந்தல்’!

இளையராஜா இசையில்... ஆஸ்கர் நோக்கி ‘கோந்தல்’!

‘கோந்தல்’ (Gondhal) திரைப்படம், 2027ஆம் ஆண்டுக்கான 99வது ஆஸ்கர் விருதில் ‘சிறந்த சர்வதேசத் திரைப்படம்’ பிரிவில் இந்தியாவின் அதிகாரப்பூர்வ நுழைவுப் படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இயக்குநர் சந்தோஷ் தவாகர் இயக்கிய இந்த மராத்தி திரைப்படம், மகாராஷ்டிராவின் கிராமப்புறங்களில் நடைபெறும் பாரம்பரிய ‘கோந்தல்’ சடங்கு மற்றும் நாட்டுப்புறக் கலை வடிவத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதிலும் இருந்து பரிசீலனைக்கு வந்த 33 திரைப்படங்களில் இருந்து, பல்வேறு கட்ட ஆய்வுகளுக்குப் பிறகு இப்படம் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

மேலும், 56வது இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவில் (IFFI) இப்படத்தின் இயக்கத்திற்காக சந்தோஷ் தவாகர் ‘வெள்ளி மயில்’ (Silver Peacock) விருது பெற்றுள்ளார்.

ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்படும் 4வது மராத்தி திரைப்படம் என்ற பெருமையையும் ‘கோந்தல்’ பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *