செய்திகள்

கார்த்திகை மாதம் வெளியாகும் வைபவின் ‘மணிகண்டா’ திரைப்படம்!

கார்த்திகை மாதம் வெளியாகும் வைபவின் ‘மணிகண்டா’ திரைப்படம்!

நடிகர் வைபவ் நடிப்பில் உருவாகியுள்ள ‘மணிகண்டா’ திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. ஆன்மிகம் மற்றும் புராணப் பின்னணியைக் கொண்ட கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் போஸ்டரில், வைபவ் பாரம்பரிய உடையில் கையில் வேலுடன் காட்சியளிக்கிறார். அவருக்குப் பின்னால் பிரம்மாண்டமான தெய்வ உருவம் இடம்பெற்றுள்ளது.

இப்படத்தை விஷ்ணு சசி சங்கர் இயக்கியுள்ளார். ஜே.கே. சரவணா மற்றும் எம். ராஜாராம் தயாரித்துள்ள இப்படத்திற்கு, வெங்கட் பிரபு கிரியேட்டிவ் புரொடியூசராகப் பணியாற்றியுள்ளார்.

‘Manikanda – Tat Tvam Assi’ என்ற வாசகத்துடன் வெளியாகியுள்ள போஸ்டர், படத்தின் ஆன்மிகப் பின்னணியை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. மேலும், இப்படம் 2026ஆம் ஆண்டு கார்த்திகை மாதத்தில் திரையரங்குகளில் வெளியாகும் என போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் மற்றும் வெளியீடு தொடர்பான கூடுதல் தகவல்களை ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.