செய்திகள்

23 மாவட்டங்கள்.. இரவு 7 மணி வரை.. வெளுத்து வாங்கப் போகுது மழை..!

தமிழ்நாட்டில் இரவு 7 மணி வரை 23 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கப் போவதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது

தமிழ்நாட்டில் சென்னை உள்பட 23 மாவட்டங்களில் இரவு 7 மணிவரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


தெற்கு அந்தமான் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரமடைந்து ‘முரசு’ புயலாக உருவெடுத்துள்ளது. இதன் மூலம் இந்திய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை காலை 11:30 மணிக்கு, முரசு புயலாக வலுவடைந்துள்ளது. இது நாளை (நவ. 2) மேற்கு – மத்திய வங்கக் கடலில் தீவிர புயலாக மேலும் வலுவடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதனையும் படியுங்கள் : BIGG BOSS சீசன் 10 – இந்த வாரம் வெளியேறியது இவரா..?? – TTF தங்கச்சிக்கு வந்த சோதனை..!

தொடர்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகரும் இந்தப் புயலானது, நவ. 3 ஆம் தேதி காலை வாக்கில், நெல்லூருக்கும் நரசபூருக்கும் இடையே தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரையை கடக்கக்கூடும். அப்போது, மணிக்கு 100 முதல் 110 கி.மீ. வேகத்திலும், அவ்வப்போது 120 கி.மீ வேகத்திலும் காற்று வீசக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்யலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே புயல் மற்றும் வளிமண்டல சுழற்சியின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.