BIGG BOSS சீசன் 10 – இந்த வாரம் வெளியேறியது இவரா..?? – TTF தங்கச்சிக்கு வந்த சோதனை..!
பிக்பாஸ் சீசன் நிகழ்ச்சியில் இந்த வாரம் யார் வெளியேறியது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் தொடங்கி பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் விருவிருப்பாக நடந்து வருகிறது. 50 நாட்களை கடந்துள்ள நிலையில் இந்த வாரம் வெளியேறிய போட்டியாளர் யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது
இந்த நிகழ்ச்சி இந்த வாரத்துடன் 8 வாரங்களை பிக் பாஸ் நிகழ்ச்சி நிறைவு செய்துள்ளது. அதாவது, ஞாயிற்றுக்கிழமையான இன்றுடன் 56-வது நாளை எட்டியுள்ளது.

கடந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியை நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கியிருந்த நிலையில், இந்த வாரம் மீண்டும் விஜய் சேதுபதியே நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். தெலுங்கில் இதேபோல நாகர்ஜுனா இல்லாதபோது ராஜமாதாவாக ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கியிருந்தார்.
இதனிடையே, 8வது வாரத்திற்கான நாமினேஷன் கடந்த திங்கள்கிழமை நடைபெற்றது. பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்கள், இந்தப் போட்டியில் நீடிக்கத் தகுதியற்றவர்கள் என்ற அடிப்படையில் இருவருக்கு வாக்களிக்க வேண்டும்.
இதன் அடிப்படையில், இந்த நாமினேஷனுக்கு அஷ்மிதா, அவினாஷ், அன்சர், கரிஷ்மா, தன்யா, ஜேசன், வினோத் பாபு உள்ளிட்ட 15 பேர் தேர்வாகி இருந்தனர்.
இதனையும் படியுங்கள் : நாட்டின் வளர்ச்சிக்கு தமிழர்களின் பங்கு அளப்பரியது – பிரதமர் மோடி புகழாரம்
இந்த வாரம் முழுவதும், இந்தப் பட்டியலில் உள்ளவர்களுக்கு மக்கள் வாக்களித்திருந்த நிலையில், குறைந்த வாக்குகளைப் பெற்ற கரிஷ்மா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார்.

தற்போதைய பிக்பாஸ் சீசனில் டாஸ்க் மற்றும் செயல்பாடுகளில் கவனம் ஈர்த்து தனக்கென தனி அங்கீகாரத்தை டிடிஎப் வாசன் பெற்றுள்ள நிலையில் அவருக்கும் கரிஷ்மாவுக்கு அண்ணன் தங்கை Bond இருந்து வருகிறது. இந்த நிலையில் கரிஷ்மா வெளியேறியது டிடிஎப் வாசனுக்கு அவரது ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
