ரூ.634 கோடி.. காலையில் Janani.. மாலையில் Shabana.. – அதிர்ச்சி கொடுக்கும் TV பிரபலங்கள்..!
திமுகவைச் சார்ந்த முக்கிய அரசியல்வாதியுடன் ரூ.634 கோடி தொடர்புடைய விவகாரத்தில் ஜனனி அசோக்குமார் மறுப்பு தெரிவித்த நிலையில் தற்போது ஷபானா மறுப்பு தெரிவித்துள்ளார்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீதான ரூ.634 கோடி ஊழல் வழக்கில் சின்னத்திரை நடிகைக்கு தொடர்பு இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவிய நிலையில், இந்த விவகாரத்துக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என நடிகை ஜனனி அசோக்குமார் மறுப்பு தெரிவித்து பரபரப்பை கிளப்பினார்.

இந்த நிலையில் இந்த விவாகாரத்தின் சூடு அணைவதற்குள் அடுத்த சின்னத்திரை நடிகையான ஷபானாவும் தனக்கும் அதற்கும் தொடர்பு இல்லை என மறுப்பு வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது..
” கடந்த இரண்டு நாட்களாக, ஒரு முக்கிய அரசியல்வாதியுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ₹634 கோடி விவகாரத்துடன் இணைத்து யூடியூப் (YouTube), எக்ஸ் (X), ஃபேஸ்புக் (Facebook) மற்றும் இன்ஸ்டாகிராமில் (Instagram) எனது பெயரும் புகைப்படங்களும் பரப்பப்பட்டு வருகின்றன.
இந்தக் கூற்றுகள் மிகவும் தனிப்பட்ட ரீதியிலான தாக்குதலாக மாறி வருகின்றன; மக்கள் என்னிடம் இதற்கான விளக்கம் கேட்டு வருகின்றனர். என்னிடம் விளக்கம் கேட்கப்படுவதற்கு முன்பு, நான் கேட்க விரும்பும் சில கேள்விகள் இதோ: பேசப்பட்டு வரும் ஆவணத்தில் எனது பெயர் எங்கு இடம்பெற்றுள்ளது? இந்த விவகாரத்துடன் என்னை இணைக்கும் சரிபார்க்கப்பட்ட ஆதாரம் என்ன?
முதலில் எனது பெயரை இதில் இணைத்தது யார், எந்த அடிப்படையில்?

பல சமூக வலைதளப் பக்கங்கள் ஒரே மாதிரியான குறிப்புகளுடன் (captions) இதே குற்றச்சாட்டுகளை ஏன் திரும்பத் திரும்பப் பகிர்கின்றன? இந்தக் குற்றச்சாட்டுகளைப் பரப்புபவர்களிடம் அவற்றின் மூலம் (source) என்னவென்று கேட்கப்படாத நிலையில், நான் மட்டும் விளக்கம் அளிக்க வேண்டும் என்று ஏன் எதிர்பார்க்கப்படுகிறது?
என்னை இழிவுபடுத்துவதாலும், ஒழுக்கக்கேடானவள் என அவதூறு பேசுவதாலும் (slut-shaming) என்ன நிரூபிக்கப்படுகிறது? என்னைக் குறித்து வெளியிடப்படும் பாலியல் ரீதியான மற்றும் அவதூறான ‘மீம்ஸ்கள்’ (memes) மற்றும் பதிவுகள் தரக்குறைவானவை, ஏற்றுக்கொள்ள முடியாதவை. ஒரு தனிநபர் மீதான கடுமையான தாக்குதல் இது.
இதனையும் படியுங்கள் : 23 மாவட்டங்கள்.. இரவு 7 மணி வரை.. வெளுத்து வாங்கப் போகுது மழை..!
இந்தப் பொய்களை அவசர அவசரமாக வெளியிட்டு, பகிர்ந்து, இதன்மூலம் பணம் ஈட்டத் துடித்தவர்களுக்கு: இந்தக் குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை என உங்களுக்குத் தெரியவந்தால், அவற்றை எவ்வளவு பகிரங்கமாகப் பகிர்ந்தீர்களோ, அதே அளவு வெளிப்படையாகத் திருத்திக் கொள்வீர்களா? எனது பெயரைக் களங்கத்திலிருந்து மீட்டெடுக்க இதே அளவு முயற்சி செய்வீர்களா? அல்லது அடுத்த விவகாரத்தை நோக்கி சாதாரணமாகக் கடந்து சென்று விடுவீர்களா?

ஒவ்வொரு மணிநேரமும் இந்தப் பொய்யான குற்றச்சாட்டுகள் வலுத்துக்கொண்டே செல்கின்றன. என் மீது அக்கறை கொண்டு என்னைத் தொடர்புகொண்ட அனைவருக்கும் இந்த விளக்கத்தைப் பகிர்கிறேன்.
இந்தக் குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானவை மற்றும் தவறாக வழிநடத்தக்கூடியவை! எனது சுயமரியாதையை யாரிடமும் யாசித்து நிற்பதற்காக நான் இங்கு வரவில்லை. அதைத் தருவதற்கோ அல்லது பறித்துக்கொள்வதற்கோ உங்களுக்கு எந்த உரிமையும் இருந்ததில்லை.
நான் யார் என்பது எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் நன்றாகத் தெரியும்; அது மட்டுமே முக்கியமான உண்மை. என நடிகை ஷபானா குறிப்பிட்டுள்ளார்
