‘விஜய் அண்ணா இல்லாமல் இது சாத்தியமில்லை’ – அட்லீ
தனது திரையுலக வளர்ச்சியில் நடிகர் விஜய்க்கு முக்கிய பங்கு இருப்பதாக தயாரிப்பாளரும் இயக்குநருமான அட்லீ தெரிவித்துள்ளார்.
“என்னுடைய பேண்ட், சட்டை, வாட்ச் என அனைத்தும் என் உழைப்பால் வந்தவை என்றாலும், விஜய் அண்ணா இல்லாமல் இதெல்லாம் சாத்தியமில்லை. ‘ராஜா ராணி’ படத்திலேயே பிரபலமானாலும், அடுத்தடுத்த தொடர் வெற்றிகளால் விஜய் அண்ணா என்னை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் சென்றார்” என அட்லீ கூறியுள்ளார்.
மேலும், ‘ஜவான்’ வாய்ப்பு கிடைத்தபோது, ‘உன் வாழ்க்கை மாறப்போகிறது; இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்’ என விஜய் அறிவுறுத்தியதாகவும், அந்த வார்த்தைகள் பின்னர் உண்மையானதாகவும் தெரிவித்துள்ளார்.
விஜய்யை அடுத்த பட வாய்ப்புக்காக புகழ்வதாக சிலர் கூறலாம் என குறிப்பிட்ட அட்லீ, “அவர் முதல்வராகிவிட்டார்; இனி அது சாத்தியமில்லை” எனக் கூறினார்.
தொடர்ந்து, விஜய் அரசியல் களத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், தற்போது அடுத்த தலைமுறையினரும் சட்டமன்றக் கூட்டத்தொடரை கவனிக்கும் நிலை உருவாகியுள்ளதாகவும் அட்லீ தெரிவித்துள்ளார்.

