செய்திகள்

ஸ்பெயினில் நேருக்கு நேர் மோதிய 2 ரயில்கள்! பலர் காயம்; ரயில் சேவைகள் நிறுத்தம்!

ஸ்பெயினில் நேருக்கு நேர் மோதிய 2 ரயில்கள்! பலர் காயம்; ரயில் சேவைகள் நிறுத்தம்!

ஸ்பெயின் நாட்டின் மத்தியப் பகுதியில் உள்ள டோலிடோ மாகாணத்தில் இன்று (அக்டோபர் 28) இரண்டு அதிவேக ரயில்கள் மோதிக்கொண்ட விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பல பயணிகள் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

ஸ்பெயின் ரயில்வே உள்கட்டமைப்பு நிர்வாக அமைப்பான ADIF வெளியிட்ட தகவலின்படி, மாட்ரிட் நகரிலிருந்து தெற்கு ஸ்பெயினின் ஆண்டலூசியா பகுதியை இணைக்கும் அதிவேக ரயில் பாதையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. ரயில்கள் மோதியதைத் தொடர்ந்து அந்த வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

உர்டா நகரின் மேயர் மானுவல் கலான், சில பயணிகள் காயமடைந்துள்ளதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக நகரின் விளையாட்டு அரங்கைத் தயார் செய்யுமாறு அவசரகாலப் பாதுகாப்புப் பிரிவினர் கேட்டுக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆரம்பகட்ட தகவல்களின்படி, இரண்டு ரயில்களும் ஒரே திசையில் சென்றுகொண்டிருந்தபோது, முன்னால் சென்ற ரயிலின் பின்பகுதியில் மற்றொரு ரயில் மோதியதாகக் கூறப்படுகிறது. இந்த மோதலில் சில ரயில் பெட்டிகள் தடம் புரண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்துக்கான துல்லியமான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.