30 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மேம்பட்ட மின் ஆய்வகங்கள் திறப்பு!
தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்கள், இன்று (அக். 28) சென்னை கிண்டியில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற விழாவில் பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.
Schneider Electric India Pvt. Ltd. நிறுவனத்தின் உதவியுடன், தமிழ்நாட்டில் உள்ள 30 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள மேம்பட்ட மின் ஆய்வகங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார். மேலும், 40 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நவீன மின் ஆய்வகங்களை அமைப்பதற்காக அந்நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

தொடர்ந்து, 59-வது மாநில அளவிலான திறன் போட்டியில் வெற்றி பெற்ற 15 மாணவ, மாணவியருக்கு தலா ரூ.25,000 ஊக்கத்தொகைக்கான காசோலைகளை வழங்கினார். அகில இந்திய தொழிற்தேர்வுகளில் தேசிய அளவில் முதலிடம் பெற்ற 60 மாணவ, மாணவியருக்குப் பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கி வாழ்த்தினார்.

மேலும், 673 இளநிலை பயிற்சி அலுவலர்களுக்குப் பணிநியமன ஆணைகளையும் முதலமைச்சர் வழங்கினார். தொழிற்பயிற்சி மாணவர்களின் திறன்களை மேம்படுத்துதல், நவீன தொழில்நுட்பப் பயிற்சியை வழங்குதல் மற்றும் வேலைவாய்ப்புகளை அதிகரித்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

