செய்திகள்

சொத்து வரி செலுத்த அக்டோபர் 31 கடைசி நாள்! 5% சலுகை பெற சென்னை மாநகராட்சி அறிவிப்பு!

சொத்து வரி செலுத்த அக்டோபர் 31 கடைசி நாள்! 5% சலுகை பெற சென்னை மாநகராட்சி அறிவிப்பு!

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் சொத்து உரிமையாளர்கள், நடப்பு நிதியாண்டின் இரண்டாம் அரையாண்டுக்கான சொத்து வரியை அக்டோபர் 31ஆம் தேதிக்குள் செலுத்தினால் 5 சதவீத ஊக்கத்தொகை சலுகையைப் பெறலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் விதிகளின்படி, ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதங்களின் முதல் 30 நாட்களுக்குள் சொத்து வரியைச் செலுத்துவோருக்கு 5 சதவீத ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. ஒரு சொத்து மதிப்பீட்டுக்கு அதிகபட்சமாக ரூ.5,000 வரை இந்தச் சலுகை கிடைக்கும். முழுச் சொத்து வரியையும் செலுத்தினால் மட்டுமே இந்த ஊக்கத்தொகையைப் பெற முடியும்.

சொத்து உரிமையாளர்கள் சென்னை மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக ஆன்லைனில் வரியைச் செலுத்தலாம். மேலும், ‘நம்ம சென்னை’ செயலி, Paytm, இ-சேவை மையங்கள் மற்றும் மாநகராட்சி அலுவலகங்கள் உள்ளிட்ட வழிகளிலும் பணம் செலுத்த வசதிகள் உள்ளன.

எனவே, சலுகையைப் பயன்படுத்த விரும்பும் சொத்து உரிமையாளர்கள் அக்டோபர் 31ஆம் தேதிக்குள் தங்களது சொத்து வரியைச் செலுத்துமாறு மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. காலக்கெடுவுக்குப் பிறகு செலுத்தப்படும் நிலுவைத் தொகைக்கு விதிகளின்படி மாதத்திற்கு 1 சதவீத எளிய வட்டி விதிக்கப்படலாம்