செய்திகள்

12 ஆண்டுகளுக்குப் பிறகு நஸ்ரியாவின் தமிழ் சினிமா கம்பேக் – நயன்தாரா வாழ்த்து!

12 ஆண்டுகளுக்குப் பிறகு நஸ்ரியாவின் தமிழ் சினிமா கம்பேக் – நயன்தாரா வாழ்த்து!

12 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் மீண்டும் நடிக்கவுள்ள நடிகை நஸ்ரியா நஜிமுக்கு, நடிகை நயன்தாரா தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இவர்களின் அன்பான சமூக வலைதளப் பதிவு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

நஸ்ரியா, இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படம் மூலம் மீண்டும் தமிழ்த் திரையுலகிற்கு திரும்புகிறார். கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான ‘திருமணம் எனும் நிக்காஹ்’ திரைப்படத்திற்குப் பிறகு, அவர் நேரடித் தமிழ்ப் படத்தில் நடிக்கவில்லை. இதனால் அவரது ரீ-என்ட்ரியை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில், நஸ்ரியாவின் வருகையை வரவேற்கும் வகையில் நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், “உங்களை மீண்டும் திரையில் காண ஆவலாக இருக்கிறேன்” எனத் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

இதற்கு நன்றி தெரிவித்த நஸ்ரியா, “Thank you so much ma’am… Love you” எனப் பதிலளித்ததுடன், நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்திற்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, நவம்பர் 6ஆம் தேதி ‘சீன்’ மற்றும் ‘மூக்குத்தி அம்மன் 2’ ஆகிய இரு திரைப்படங்களும் வெளியாகவுள்ள நிலையில், முன்னணி நடிகைகளின் இந்த அன்பான வாழ்த்துப் பரிமாற்றம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.