தீபாவளியைக் கொண்டாடத் தயாராகும் சிங்கப்பூர்!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிங்கப்பூர் முழுவதும் வண்ணமயமான அலங்காரங்களால் களைகட்டியுள்ளது. தீபாவளியை வரவேற்கும் வகையில் முக்கிய வீதிகள், வணிகப் பகுதிகள் மற்றும் பொது இடங்களில் கண்கவர் மின்விளக்குகள் மற்றும் அலங்காரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, சிங்கப்பூரின் லிட்டில் இந்தியா பகுதியில் வண்ணமயமான விளக்குகள், தோரணங்கள் மற்றும் தீபாவளி அலங்காரங்கள் பார்வையாளர்களைக் கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக சிங்கப்பூருக்கான இந்திய வம்சாவளி சமூகத்தினரின் கொண்டாட்டங்களை வரவேற்று, தீபாவளி புகைப்படங்களைப் பகிருமாறு சிங்கப்பூர் காவல்துறை ஆணையர் HC Wong தனது சமூக வலைதளப் பதிவில் தெரிவித்துள்ளார்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிங்கப்பூர் முழுவதும் பண்டிகைக் கொண்டாட்டங்கள் களைகட்டத் தொடங்கியுள்ளன.
