செய்திகள்

நாட்டின் வளர்ச்சிக்கு தமிழர்களின் பங்கு அளப்பரியது – பிரதமர் மோடி புகழாரம்

தமிழ்நாடு நாளை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இந்திய சுதந்திரம் அடைந்த பின்னர் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டது. ஆனால் திமுக ஆட்சி காலத்தில் தமிழ்நாடு எனும் பெயர் சூட்டப்பட்ட தினத்தை தமிழ்நாடு தினம் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழ்நாடு எனும் மாநிலம் பிரிக்கப்பட்ட நாளான நவம்பா் 1-ஆம் தேதியை தமிழ்நாடு நாளாக முதல்வர் விஜய் தலைமையிலான அரசு அறிவித்தது. இதனை இன்று அரசு சார்பில் விழாவாக கொண்டாடப்பட்டது.

அதன்படி, தமிழ்நாடு நாளான இன்று பல்வேறு தலைவர்கள் தங்களுடைய வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் இந்த சிறப்பான தமிழ்நாடு நாளில் மனம் நிறைந்த நல்வாழ்த்துகள்! தொழில்முனைவோடு கடின உழைப்பும் மிக்கவர்களாய் விளங்கும் தமிழ்நாட்டு மக்கள் இந்தியாவின் வளர்ச்சிக்கு மகத்தான பங்களிப்பை வழங்கியுள்ளனர்.

உற்பத்தித் துறை முதல் வாகனங்கள் மற்றும் ஜவுளித்துறை, மின்னணுவியல், விண்வெளி தொழில்நுட்பம், மருத்துவம் மற்றும் வளர்ந்துவரும் தொழில்துறைகள் வரை, தமிழகம் தனித்துவமிக்க கண்டுபிடிப்பு, திறன் மற்றும் தொழில்துறை சிறப்புகளை தன்னகத்தே கொண்டு சிறந்து விளங்குகிறது.

தமிழ்நாட்டு மக்கள் தங்கள் பண்பாடு, தனித்துவம் மற்றும் பாரம்பரியம் குறித்து பெருமிதம் கொள்கின்றனர். தமிழ் கலாச்சாரம் நம் நாட்டின் நாகரிகப் பயணத்தைப் பல வழிகளில் செழுமையாக்கியுள்ளது.

இந்த நன்னாள் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் இன்றும் வரும் காலங்களிலும் மகிழ்ச்சியையும், வெற்றியையும், புதிய வாய்ப்புகளையும் வாரி வழங்கட்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.