அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு!
தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி (DA) உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் வெளியிட்டுள்ளார்.
இதன்படி, தற்போது 60 சதவீதமாக வழங்கப்பட்டு வரும் அகவிலைப்படி, 63 சதவீதமாக உயர்த்தி வழங்கப்பட உள்ளது. இந்த உயர்வு 2026 ஜூலை 1ஆம் தேதி முதல் முன்தேதியிட்டு கணக்கிட்டு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பின் மூலம் தமிழ்நாடு முழுவதும் சுமார் 16 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெற உள்ளனர். குறிப்பாக, அரசு ஊழியர்களின் மாத ஊதியத்திலும்,
ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியத்திலும் இந்த உயர்வு பிரதிபலிக்கும். மேலும், நிலுவைத் தொகையும் உரிய நடைமுறைகளின்படி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த அகவிலைப்படி உயர்வைச் செயல்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசுக்கு ஆண்டுக்கு கூடுதலாக ரூ.1,858 கோடி செலவாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விலைவாசி உயர்வைக் கருத்தில் கொண்டு அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு நிதி ஆதரவு அளிக்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மத்தியில் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
