செய்திகள்

தீபாவளி பண்டிகை – 5 முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

தீபாவளி பண்டிகை – 5 முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளின் கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில், தெற்கு ரயில்வே 5 முன்பதிவில்லா சிறப்பு மெமு ரயில்களை அறிவித்துள்ளது. இந்த ரயில்கள் சென்னை, தாம்பரம், திருச்சி மற்றும் மானாமதுரை இடையே இயக்கப்பட உள்ளன.

1. தாம்பரம் – மானாமதுரை (06161/06162)

நவம்பர் 6-ம் தேதி மாலை 5.30 மணிக்குத் தாம்பரத்தில் புறப்படும் ரயில், மறுநாள் அதிகாலை 3.45 மணிக்கு மானாமதுரையைச் சென்றடையும். மறுமார்க்கத்தில் நவம்பர் 7-ம் தேதி காலை 6.30 மணிக்குப் புறப்பட்டு மாலை 3.45 மணிக்குத் தாம்பரம் வந்தடையும்.

2. தாம்பரம் – மானாமதுரை (06159/06160)

நவம்பர் 7-ம் தேதி மாலை 4.35 மணிக்குத் தாம்பரத்தில் புறப்படும் ரயில், மறுநாள் அதிகாலை 1.45 மணிக்கு மானாமதுரையை அடையும். மறுமார்க்கத்தில் நவம்பர் 9-ம் தேதி இரவு 10 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 8.30 மணிக்குத் தாம்பரம் வந்தடையும்.

3. சென்னை எழும்பூர் – திருச்சி (06191)

நவம்பர் 6-ம் தேதி மாலை 6.30 மணிக்குச் சென்னை எழும்பூரில் புறப்படும் ரயில், மறுநாள் அதிகாலை 4.45 மணிக்குத் திருச்சியைச் சென்றடையும்.

4. திருச்சி – தாம்பரம் (06192)

நவம்பர் 7-ம் தேதி காலை 5.50 மணிக்குத் திருச்சியில் புறப்பட்டு, காலை 11.30 மணிக்குத் தாம்பரத்தை வந்தடையும்.

5. சென்னை எழும்பூர் – திருச்சி (06193/06194)

நவம்பர் 7-ம் தேதி இரவு 7 மணிக்குச் சென்னை எழும்பூரில் புறப்படும் ரயில், மறுநாள் அதிகாலை 4.45 மணிக்குத் திருச்சியை அடையும். மறுமார்க்கத்தில் நவம்பர் 9-ம் தேதி இரவு 10.45 மணிக்குத் திருச்சியில் புறப்பட்டு, நவம்பர் 10-ம் தேதி காலை 6.50 மணிக்குச் சென்னை எழும்பூரை வந்தடையும்.

இந்த 5 சிறப்பு ரயில்களும் 12 பெட்டிகளைக் கொண்ட மெமு ரயில்களாக இயக்கப்படுகின்றன. ஒவ்வொரு சேவையும் குறிப்பிட்ட தேதியில் ஒருமுறை மட்டுமே இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இதனால் தீபாவளிக்கு சொந்த ஊர்களுக்குச் செல்லத் திட்டமிடும் பயணிகளுக்கு கூடுதல் போக்குவரத்து வசதி கிடைத்துள்ளது.