‘சீன்’ காட்டிக் கொண்டிருக்கும் சீன் திரைப்படம் அன்பையும் பாராட்டையும் பொழிந்துக் கொண்ட இரு பிரபலங்கள்
‘சீன்’ (Scene) எனும் தமிழ் அதிரடி-நகைச்சுவைத் திரைப்படம், தீபாவளியை முன்னிட்டு, 2026-ஆம் ஆண்டு நவம்பர் 6-ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.
இப்படம் நடிகர் சூர்யாவின் ரசிகர்களுக்கு, நல்ல விருந்தாகவே அமைந்தது எனலாம்.
இந்நிலையில் தான் நடிகர் மகேஷ் பாபு தனது எக்ஸ் பக்கத்தில்…
Scene படம் பார்த்தேன், மிகவும் பிடித்துவிட்டது! அருமையான, புத்திசாலித்தனமான, மிகுந்த பொழுதுபோக்கு அம்சம் கொண்ட படம்… ‘இன்பராஜ்’ கதாபாத்திரத்தில் சூர்யா மிகச் சிறப்பாக நடித்துள்ளார்! நஸ்ரியா மற்றும் நஸ்லென் ஆகியோரின் நடிப்பும் அபாரம்… ஜித்து மாதவன், அற்புதமான எழுத்து மற்றும் நேர்த்தியான இயக்கம்… அனைத்து அம்சங்களிலும் ஈர்க்கக்கூடிய படைப்பு… கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய படம்!
என பதிவிட்டு பாராட்டியுள்ளார் .
இதனை பார்த்த சூர்யா …,
உங்கள் கனிவான வார்த்தைகளுக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி.
எங்கள் திரைப்படத்தை பார்ப்பதற்கு நேரம் ஒதுக்கி உங்கள் அன்பை பகிர்ந்துக்கொண்டது உங்கள் பெருந்தன்மையேயும்,கனிவையும் காட்டுகிறது.
எங்கள் ஒட்டுமொத்த குழுவின் சார்பாகவும்,என் சார்பாகவும்,இந்த அழகான செயலுக்கு மிகுந்த அன்பும் மரியாதையும் ! கொண்ட மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
