செய்திகள்

2004-ல் ‘விருமாண்டி’ ஆனது… மீண்டும் ‘சண்டியர்’ பெயருக்கு எதிர்ப்பு தெரிவித்த கிருஷ்ணசாமி!

2004-ல் 'விருமாண்டி' ஆனது... மீண்டும் 'சண்டியர்' பெயருக்கு எதிர்ப்பு தெரிவித்த கிருஷ்ணசாமி!

நடிகர் கமல்ஹாசன் நடிக்கவுள்ள அடுத்த திரைப்படத்திற்கு ‘சண்டியர்’ எனப் பெயரிடப்பட்டுள்ள நிலையில், அந்தப் பெயருக்கு புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

கடந்த 2004-ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் உருவான திரைப்படத்திற்கும் ‘சண்டியர்’ எனப் பெயரிடப்பட்டிருந்தது. அப்போதும் கிருஷ்ணசாமி இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், படத்தின் பெயர் ‘விருமாண்டி’ என மாற்றப்பட்டது. தற்போது மீண்டும் அதே பெயர் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கிருஷ்ணசாமி எதிர்ப்பு தெரிவித்திருப்பது திரையுலகில் கவனம் பெற்றுள்ளது.