மருத்துவமனை பில்லையும் வாங்க மறுத்த மருத்துவர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள்..! மகன் ஸ்ரீகாந்த் தேவா நெகிழ்ச்சி பேட்டி!
இசையமைப்பாளர் தேவாவின் மனிதநேயத்தையும், அவரது இசைக்கு மக்கள் மத்தியில் இருக்கும் வரவேற்பையும் வெளிப்படுத்தும் வகையில் அவரது மகன் ஸ்ரீகாந்த் தேவா நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.
ஒரு பேட்டியில் பேசிய ஸ்ரீகாந்த் தேவா, தனது தந்தையை மருத்துவமனையில் அனுமதித்தபோது நடைபெற்ற சம்பவத்தை நினைவுகூர்ந்தார்.
அப்போது தனது தந்தைக்கு மருத்துவமனையில் CPR சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், மருத்துவர்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை என்றும் தெரிவித்தார். இதையடுத்து மருத்துவமனை கட்டணம் எவ்வளவு என்று கேட்டபோது, அங்கிருந்த மருத்துவர், “அவர் எவ்வளவு பெரிய லெஜண்ட்! அவருக்கு போய் காசா? முடிந்தால் ஆம்புலன்ஸில் அழைத்து வந்ததற்கான கட்டணத்தை மட்டும் கொடுத்துவிடுங்கள்” என்று கூறியதாகத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களிடம் கட்டணம் குறித்து கேட்டபோதும், அவர்கள் பணம் வாங்க மறுத்ததாகக் கூறினார். “சார், தேவா சார் பாடல்களைக் கேட்டுத்தான் நாங்கள் வண்டியே ஓட்டுவோம். அவரிடம் போய் காசா? வேண்டாம் சார்” என்று அவர்கள் கூறியதாக ஸ்ரீகாந்த் தேவா நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார்.
தனது தந்தையின் இசை எத்தனையோ மக்களின் வாழ்க்கையில் ஒரு பகுதியாக இருந்துள்ளது என்பதையும், அவர் சம்பாதித்த அன்பு எவ்வளவு பெரியது என்பதையும் இந்தச் சம்பவம் உணர்த்துவதாக அவரது பேச்சு அமைந்துள்ளது.
