டி20 உலகக் கோப்பை: இத்தாலிக்கு 166 ரன்கள் இலக்கு நிர்ணயித்த வெஸ்ட் இண்டீஸ்
10வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. கொல்கத்தாவில் இன்று நடைபெறும் 37வது லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் – இத்தாலி அணிகள் மோதுகின்றன.
டாஸ் வென்ற இத்தாலி அணியின் கேப்டன் ஹாரி மனேன்டி பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது .
வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஷாய் ஹோப் ஹாப் நிலைத்து விளையாடி ரன்கள் குவித்தார். அதிரடியாகி விளையாடிய அவர் அரைசதமடித்தார். ஷாய் ஹோப் 75 ரன்கள் எடுத்தார்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 166 ரன்கள் இலக்குடன் இத்தாலி விளையாடுகிறது. .

