LJK விற்கு ஆதரவாக அண்ணாமலை பிரச்சாரம்

தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை அவர்கள், லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் அவர்களை ஆதரித்து புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் உற்சாகமான ரோடு ஷோ நடத்தினார்.


சாரம், வெங்கடேஸ்வரா நகர், ரெயின்போ நகர், கிருஷ்ணா நகர், எழில் நகர், செந்தாமரை நகர், சாமி பிள்ளை தோட்டம், சித்தானந்தா கோவில் வழியாக கருவாடிக்குப்பம் சிவாஜி சிலை வரை இந்த ரோடு ஷோ நடைபெற்றது. முக்கிய வீதிகள் முழுவதும் ஊர்வலமாக சென்ற இந்த பிரச்சாரம் மக்கள் கவனத்தை ஈர்த்தது.


இந்த ரோடு ஷோவில், தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக போட்டியிடும் ஜோஸ் சார்லஸ் மார்டின் அவர்களுக்கு ஆதரவு திரட்டும் வகையில், பொதுமக்களை நேரடியாக சந்தித்து “தர்பூசணி” சின்னத்திற்கு வாக்களிக்குமாறு அண்ணாமலை கேட்டுக்கொண்டார். கட்சி தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் திரளாக கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.


ரோடு ஷோ நடைபெற்ற பகுதிகளில் மக்கள் ஆர்வமுடன் வீதியோரங்களில் திரண்டு நின்று, அண்ணாமலை அவர்களுக்கு கையசைத்து வரவேற்பு அளித்தனர். பலர் மலர்கள் தூவி, கைஅசைத்து ஆதரவை வெளிப்படுத்தினர். பெண்கள், இளைஞர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் இந்த பிரச்சாரத்தில் உற்சாகமாக பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.


மேலும், அண்ணாமலை அவர்கள் பேசுகையில், “இளம் மற்றும் செயற்பாட்டு திறன் கொண்ட ஜோஸ் சார்லஸ் மார்டின் போன்றவர் காமராஜ் நகர் தொகுதிக்கு முன்னேற்றத்தை கொண்டு வருவார். மக்கள் மாற்றத்தை விரும்பினால், தர்பூசணி சின்னத்திற்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
அப்போது அவர் மேலும் கூறுகையில், “காமராஜ் நகர் ஒரு முக்கிய அரசியல் மையமாக மாறியுள்ளது. மக்களை நம்பி ஜோஸ் சார்லஸ் மார்டின் அரசியலுக்கு வந்துள்ளார். மாற்றத்தை உருவாக்க அவருக்கு ஆதரவு அளிக்க வேண்டும். அவரது வெற்றி இளைஞர்களுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்கும். பாஜக கூட்டணியில் LJK கட்சி முக்கிய பங்கு வகிக்கிறது” என்றார்.


இதற்கிடையில், ஜோஸ் சார்லஸ் மார்டின் அவர்கள் பேசுகையில், “நான் அரசியலுக்கு வருவதற்கு முக்கிய காரணம் அண்ணாமலை தான். எனக்கு IPS ஆக வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் மக்கள் சேவைக்காக அரசியலுக்கு வந்துள்ளேன். கூட்டணி கட்சிகள் அனைத்தும் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.


இந்த ரோடு ஷோவின் மூலம் காமராஜ் நகர் தொகுதியில் தேர்தல் பரபரப்பு அதிகரித்துள்ளதுடன், பொதுமக்களின் உற்சாகமான வரவேற்பு ஜோஸ் சார்லஸ் மார்டின் அவர்களுக்கு வலுவான ஆதரவை உருவாக்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *