“ஃபிரெஞ்சு வெளிநாட்டு மொழி அல்ல” – முதல்வர் ரங்கசாமி வலியுறுத்தல்

“புதுச்சேரிக்கு ஃபிரெஞ்சு மொழி என்பது வெளிநாட்டு மொழியல்ல; அது புதுவையின் வரலாறும், பண்பாட்டு அடையாளமும் ஆகும்” என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

ஃபிரெஞ்சு மொழிக்கு சிறப்பு அனுமதி வழங்க வேண்டும் எனக் கோரி மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், புதுச்சேரியின் வரலாறு மற்றும் கலாச்சாரத்துடன் ஃபிரெஞ்சு மொழி நெருங்கிய தொடர்புடையது என்றும், மாணவர்கள் தொடர்ந்து அந்த மொழியை கற்கும் வகையில் மத்திய அரசு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *