நிவின் பாலி ரசிகர்களுக்கு ஓணம் ட்ரீட்…
‘பிரேமலு’ படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் கிரிஷ் ஏ.டி, இயக்கும் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படத்தில் நிவின் பாலி கதாநாயகனாக நடிக்கிறார். இதில் கதாநாயகியாக மமிதா பைஜூ நடிக்கிறார். இதை பகத் பாசில் தயாரிக்கிறார்.
இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பானது நிறைவடைத்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.ஓணத்தின் முக்கிய நாளான திருவோணம், 2026 ஆகஸ்ட் 26, புதன்கிழமை அன்று இப்படம் திரைக்கு வருகிறது.
ஜூலை 2025-ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட இப்படம், விஷ்ணு விஜய்யின் குறிப்பிடத்தக்க இசையைக் கொண்ட ஒரு குடும்பப் பொழுதுபோக்குத் திரைப்படமாக அமைவுள்ளது.பெத்லஹேம் குடும்ப யூனிட் இப்படமானது ஒரு காதல் நகைச்சுவை-நாடகத் திரைப்படமாக அமையும் எனவும் கூறப்படுகிறது.
இது பிரேமலு படக்குழுவினருக்கும் நடிகர் நிவின் பாலிக்கும் இடையிலான ஒரு முக்கிய கூட்டணியைக் குறிக்கிறது . இப்படம் குறித்து அதிகம் வெளியிடப்படாத நிலையில், நகைச்சுவையையும் உணர்ச்சியையும் கலந்து, மனதிற்கு இதமான, குடும்பப் படமாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

