பாக்ஸ் ஆபிஸை குறிவைக்கும் இன்றைய வெளியீடுகள்!
தமிழ் திரையரங்குகளை தெறிக்கவிட வந்த புதிய படைகள்! இன்று (ஜூன் 12 வெளியாகவுள்ள திரைப்படங்கள்)
ஹபீபி
மீரா கதிரவன் இயக்கத்தில் கஸ்தூரி ராஜா, ஈஷா முகமது, மாளவிகா மனோஜ், அனுஸ்ரேயா ராஜன், தனஸ்ரீ சுதாகரன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள ஹபீபி திரைப்படம் இன்று (ஜூன் 12) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
ஆட்டி
அபி நட்சத்திரா, காதல் சுகுமார் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள ஆட்டி திரைப்படம் இன்று (ஜூன் 12) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.இதனை இயக்குனர் கிட்டு இயக்கி இருக்கிறார்.இது ஒரு க்ரைம் த்ரில்லர் படம்.
டபுள் ஆக்குபென்சி
குஷ்பு தயாரிப்பில், அறிமுக இயக்குநரான அஸ்வின் கந்தசாமி இயக்குக்கிறார்.இத்திரைப்படத்தில் சந்தோஷ், ரேஷ்மா வெங்கடேஷ், சம்யுக்தா விஸ்வநாதன், வினோத் கிஷன் ஆகியோர் நடிக்கின்றனர்.இப்படம் இன்று (ஜூன் 12) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
மூன்றாம் கண்
‘மூன்றாம் கண்’ திரைப்படத்தில் விதார்த், கலையரசன், திரிகுண், சந்தோஷ் பிரதாப், தேஜு அஸ்வினி, அதுல்யா சந்திரா, ஜான் விஜய் ஆகியோர் நடித்துள்ளனர். இதனை சகோ கணேசன் எழுதி இயக்கியிருக்கிறார் இத்திரைப்படம் இன்று (ஜூன் 12) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
சாருகேசி
சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ஒய். ஜி. மகேந்திரன், சுகாசினி மணிரத்னம், சத்யராஜ், ராஜ் அய்யப்பா, தலைவாசல் விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இன்று (ஜூன் 12) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்தியில் வெளிவரும் படங்கள்
பாரத் பாக்ய விதாதா (Bharat Bhhagya Viddhaata)
மனோஜ் தபாடியா எழுதி இயக்கியுள்ள ‘பாரத் பாக்ய விதாதா’ படத்தில் கங்கனா ரணாவத், கிரிஜா ஓக், ஸ்மிதா தாம்பே, இஷா டே, பிரசாத் ஓக் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். இத்திரைப்படம் இன்று (ஜூன் 12) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
ஆங்கிலப் படங்கள்
பாக் ரூம்ஸ் (Backrooms)
கேன் பார்சன்ஸ் இயக்கத்தில் சிவெட்டல் எஜியோஃபோர், ரெனேட் ரெயின்ஸ்வே, மார்க் டுப்ளாஸ், ஃபின் பென்னட், லுகிதா மேக்ஸ்வெல் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம் இன்று (ஜூன் 12) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

