முதல்வர் விஜய்யை அவமதிக்கும் மலையாள பட நடிகர்? | திரிஷா | CMVijay

மலையாள பட நடிகரான தியான் சீனிவாசன் தமிழக முதல்வர் விஜய்யை தொடர்ந்து சீண்டியுள்ளார் . ஏற்கனவே முதல்வர் விஜய்யை சீண்டிய நிலையில் அவர் மீண்டும் அவரை சீண்டும் வகையில் அது போன்ற கருத்து வெளியிட்டது பேசுபொருளாகியுள்ளது.

‘தி விசிட்டர்’ என்னும் மலையாள படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், முதலமைச்சரின் பதவி ஏற்பு விழாவில் கலந்துக் கொண்டது குறித்தும், புடவை அணிந்துக் கொண்டு முன் வரிசையில் அமர்ந்தது குறித்தும், முதல்வர் விஜய் பதவி ஏற்கும் தருவாயில் நடிகை த்ரிஷா கண்கலங்கியது குறித்தும் கடுமையாக விமர்ச்சித்திருந்தது சர்ச்சையானது. அதனை தொடர்ந்து மீண்டும் அவர் முதல்வர் விஜய்யை ‘ஸ்டார் அண்ட் சக்ஸஸ்’ என்னும் விழாவில் கலந்துக்கொண்ட போது விமர்சித்துள்ளார்.

அப்போது நிகழ்ச்சி தொகுப்பாளர் தியான் சீனிவாசன், ‘தமிழக சிறைகளில் வாழும் கைதிகளுக்கு எளிய உணவையும், பள்ளி மாணவர்களுக்கு சத்தான உணவையும் வழங்குமாறு உத்தரவிட்டுள்ளாரே நீங்கள் கேரளா முதல்வரானால் என்ன மாற்றம் கொண்டு வருவீர்கள்’ என கேள்வி எழுப்பினார்… அதற்கு பதிலளித்த அவர் முதலமைச்சர் விஜய் செய்த எல்லாவாற்றையும் நான் செய்ய மாட்டேன் அவ்வாறு செய்தால் இங்கு அசிங்கமாகிவிடும் என்று முதல்வர் விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கையைக் குறிப்பிட்டு பேசியுள்ளார். மேலும் நான் முதலில் மலையாள நடிகர் சங்கமான

A . M . M .A அமைப்பின் தலைவராவேன் அதன் பிறகு 13 மூன்று ஆண்டுகள் கழித்து ஜோசப் விஜய் என்னும் நான் என்று பதவி ஏற்பேன் என்று முதல்வர் விஜய்யின் பாணியை நக்கல் செய்துள்ளார். இரண்டாவது முறையாக சீண்டியுள்ளார். இவர் முன் வைத்த விமர்சனங்கள் இணையத்தில் வாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *