இன்று வெளியாகிறது JAILER 2 மாஸ் அப்டேட்..!
ஜெயிலர் 2 திரைப்படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ஜெயிலர் – 2 திரைப்படத்தின் இரண்டாவது பாடலின் அப்டேட் வெளியாகியுள்ளது.
ஜெயிலர் படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் – 2 திரைப்படம் உருவாகி வருகிறது. ரஜினிகாந்த் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், மிர்ணா, யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார்.

சிறப்புத் தோற்றத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ஹ்ரித்திக் ரோஷன் போன்றோரும் நடிப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர்கள் வித்யா பாலன், எஸ்ஜே சூர்யா, சூரஜ் வெஞ்சரமூடு ஆகியோரின் கதாபாத்திர அறிமுக விடியோக்கள் கடந்த வாரம் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.
முன்னதாக, இப்படத்தின் முதல் பாடலான, ’அல்ல பொலேலோ’ வெளியாகி வைரலானது. தற்போது, இரண்டாவது பாடல் புரோமோ இன்று வெளியாகவுள்ளதாக அனிருத், நெல்சன் போஸ்டரை வெளியிட்டு அறிவித்துள்ளனர். இப்படம் அக். 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
