செய்திகள்

வசூலில் சைலண்டாக மிரட்டும் Hanuman Ansh – இவ்வளவு கோடியா???

அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட பல திரைப்படங்கள் வசூலில் திணறும் நிலையில் ஹனுமன் அன்ஸ் திரைப்படம் உலகளவில் ரூ. 400 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனைப் படைத்துள்ளது.

விஷால் சதுர்வேதியின் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ஹனுமன் அன்ஸ். இத்திரைப்படத்தில் ஷோபிநவ் சத்யா முதன்மை வேடத்தில் நடித்துள்ளார். மேலும் விஹான் ஷெட்ஜே, சந்தன் கே ஆனந்த், பூர்ணிமா திவாரி, அனில் ரஸ்தோகி, குல்ஷன் பாண்டே மற்றும் பகவதாஸ் படேல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பாபா நீம் கரோலின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவான இப்படம், ஆகஸ்ட் 7ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஆரம்பத்தில் மிதமான வசூலையே பெற்றாலும், முதல் இரண்டு வாரங்களுக்குப் பிறகு நேர்மறையான விமர்சனங்கள் மற்றும் மக்கள் மத்தியில் பரவிய நல்ல கருத்துகளால் இதன் வசூல் வேகம் எடுத்தது.

திரைப்பட வசூலைக் கணிக்கும் சாக்னில்க் தரவுகளின்படி, இப்படத்தின் உலகளாவிய மொத்த வசூல் ரூ. 401.20 கோடியாக உள்ளது. வெறும் ரூ. 2 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட படம் தொடர்ந்து வசூல் சாதனைப் படைத்து வருவது பாலிவுட்டில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *