செய்திகள்

டாஸ்மாக் கடைகளில் இருந்து 100 மீட்டர் தொலைவில் பார் அமைக்க அனுமதி – தமிழக அரசு புதிய விதிகள்!

டாஸ்மாக் கடைகளில் இருந்து 100 மீட்டர் தொலைவில் பார் அமைக்க அனுமதி – தமிழக அரசு புதிய விதிகள்!

தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகளுடன் இணைந்த பார்கள் அமைப்பதற்கான விதிகளில் தமிழக அரசு திருத்தம் செய்துள்ளது. இதன்படி, டாஸ்மாக் கடையை ஒட்டியுள்ள இடங்களில் மட்டுமின்றி, அந்தக் கடையில் இருந்து 100 மீட்டர் தொலைவுக்குள் உள்ள இடங்களிலும் பார் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

புதிய விதிகளின்படி, டெண்டர் முறையின் மூலம் தனியார் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் பார் நடத்துவதற்கான உரிமத்தைப் பெறலாம். நகர்ப்புற வளர்ச்சி மற்றும் திட்டமிடல் ஆணையங்களால் வணிக அல்லது தொழில்துறை பகுதிகளாக அறிவிக்கப்பட்ட இடங்களுக்கு 100 மீட்டர் தொலைவு கட்டுப்பாடு பொருந்தாது. அதேசமயம், ஒருங்கிணைந்த பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டப் பகுதிகளில் பார்கள் அமைக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பாரும் குறைந்தபட்சம் 20 சதுர மீட்டர் பரப்பளவில் இருக்க வேண்டும். வாடிக்கையாளர்களுக்குத் தூய்மையான குடிநீர், கை கழுவும் வசதி, மேஜை மற்றும் நாற்காலிகள் கட்டாயம் ஏற்படுத்தப்பட வேண்டும்.

மேலும், 21 வயதுக்குக் குறைவானவர்களை பாருக்குள் அனுமதிக்கக் கூடாது என்றும், அவர்களைப் பணியில் அமர்த்தக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மது அருந்துவதால் ஏற்படும் உடல்நலப் பாதிப்புகள் குறித்த எச்சரிக்கைப் பலகைகளும் வைக்கப்பட வேண்டும்.

இந்த புதிய விதிகள் மூலம் டாஸ்மாக் பார்களுக்கான டெண்டர் நடைமுறையில் கூடுதல் போட்டியை ஏற்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.