செய்திகள்

டெல்லியில் 2 நாட்கள் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி – உச்சநீதிமன்றம் உத்தரவு!

டெல்லியில் 2 நாட்கள் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி – உச்சநீதிமன்றம் உத்தரவு!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் (Delhi-NCR) பட்டாசு வெடிப்பதற்கு உச்சநீதிமன்றம் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, நவம்பர் 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் மட்டுமே பசுமைப் பட்டாசுகளை வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 8 மணி முதல் 10 மணி வரையிலும் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

அதேபோல், மருத்துவமனைகள், முதியோர் இல்லங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அமைதிப் பகுதிகளில் இருந்து 300 மீட்டர் சுற்றளவுக்குள் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், CSIR-NEERI அமைப்பின் சான்றிதழ் பெற்ற பசுமைப் பட்டாசுகளை மட்டுமே தயாரிக்கவும் விற்பனை செய்யவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பேரியம் பயன்படுத்தப்படும் பட்டாசுகள் மற்றும் தொடர் பட்டாசுகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நவம்பர் 9ஆம் தேதி முதல் பட்டாசுகளுக்கான முழுமையான தடை மீண்டும் அமலுக்கு வரும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.