தோழியைக் காப்பாற்றப் போராடிய பள்ளி மாணவி லட்சுமி – குவியும் பாராட்டுகள்!
ஆந்திரப் பிரதேச மாநிலம் ராப்தாடு பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் ஹேமந்த் என்ற இளைஞர் செயின்சா (மரங்களை அறுக்கும் இயந்திரம்) உடன் நுழைந்து, கோபிகா என்ற மாணவியைத் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வகுப்பறைக்குள் நுழைந்த அந்த இளைஞர், கோபிகாவைச் சரமாரியாகத் தாக்கியுள்ளார். அப்போது இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மற்ற மாணவர்கள் அங்கிருந்து விலகிய நிலையில், கோபிகாவின் தோழியான லட்சுமி மட்டும் தனது உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் தோழியைக் காப்பாற்ற முன்வந்துள்ளார்.
தாக்குதலில் இருந்து கோபிகாவை மீட்கப் போராடிய லட்சுமிக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன. தற்போது கோபிகா மற்றும் லட்சுமி இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கோபிகாவுக்குப் பல்வேறு முக்கிய அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது உயிரையும் பொருட்படுத்தாமல் தோழிக்காகத் துணிச்சலுடன் செயல்பட்ட லட்சுமியின் செயல் பலரது கவனத்தையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.
வீரம் என்பது வயதில் இல்லை… ஆபத்தான நேரத்தில் தோழிக்காகத் துணிந்து நின்ற லட்சுமி உண்மையான ஹீரோ!
