செய்திகள்

வெறும் ரூ.90-க்காக உ*ரிழந்த பெண் பேருந்து நடத்துநர் – சோகத்தில் குடும்பம்!

வெறும் ரூ.90-க்காக உ*ரிழந்த பெண் பேருந்து நடத்துநர் – சோகத்தில் குடும்பம்!

ஓடும் அரசு பேருந்தில் சில்லறை கொடுப்பதில் ஏற்பட்ட தகராறில், பெண் பயணி எட்டி உதைத்ததில் தவறி விழுந்த பெண் நடத்துநர் பிரவலிகா பயணி மௌனிகா மீது கொ **வழக்குப் பதிவு செய்து விசாரணை

வெறும் ரூ.90 சில்லறை தொடர்பான வாக்குவாதம், 24 வயது பெண் பேருந்து நடத்துநரின் உயிரைப் பறித்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரவாலிகா (24) என்ற பெண் நடத்துநர், தனது தந்தையின் மறைவுக்குப் பிறகு குடும்பத்தின் பொறுப்பை ஏற்றுக்கொண்டு RTC-யில் பணியாற்றி வந்துள்ளார். சம்பவத்தன்று மோனிகா என்ற பெண், தனது மகனுக்கான ரூ.10 பேருந்து பயணச்சீட்டைப் பெறுவதற்காக ரூ.100 கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

அதற்கு மீதமுள்ள ரூ.90-ஐ நடத்துநர் பிரவாலிகா பயணச்சீட்டின் பின்புறத்தில் எழுதி வைத்ததாகவும், ஆனால் அந்தப் பெண் உடனடியாகப் பணத்தைத் திருப்பிக் கேட்டதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த வாக்குவாதத்தின்போது, மோனிகா பிரவாலிகாவை ஓடும் பேருந்திலிருந்து தள்ளியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த பிரவாலிகா, பேருந்தின் பின்பக்கச் சக்கரத்தில் சிக்கி இரண்டு கால்களிலும் பலத்த காயமடைந்தார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 10 நாட்களாகச் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தந்தையை இழந்த நிலையில் குடும்பத்திற்காகப் பணியாற்றிய இளம் பெண், இவ்வாறு உயிரிழந்த சம்பவம் பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.