அமெரிக்க நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற முதல் தலைமுறை இந்திய வம்சாவளிப் பெண்!
அமெரிக்காவில் நடைபெற்ற 2026ஆம் ஆண்டு இடைக்காலத் தேர்தலில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பியா தாண்டியா (Pia Dandiya) வெற்றி பெற்றுள்ளார். புளோரிடா மாகாணத்தின் 22-வது காங்கிரஸ் தொகுதியில் போட்டியிட்ட அவர், குடியரசுக் கட்சி வேட்பாளர் கேசி அஸ்கரை தோற்கடித்து அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்குத் தேர்வாகியுள்ளார்.
இந்தத் தேர்தலில் பியா தாண்டியா 51.9 சதவீத வாக்குகளையும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட கேசி அஸ்கர் 49.1 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்த பெற்றோருக்குப் பிறந்த பியா தாண்டியா, புளோரிடாவின் பாம் பீச் கவுண்டியில் வளர்ந்தவர். தனது பணியை ஆசிரியராகத் தொடங்கிய இவர், பின்னர் நியூயார்க்கின் ஹார்லெம் பகுதியில் உயர்நிலைப் பள்ளி முதல்வராகப் பணியாற்றியுள்ளார்.
மேலும், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காகப் பள்ளி ஒன்றையும் தொடங்கியுள்ளார். 28 வயதிலேயே அந்தப் பள்ளியின் நிறுவன முதல்வராகப் பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது.
இந்த வெற்றியின் மூலம் புளோரிடா மாகாணத்திலிருந்து அமெரிக்க நாடாளுமன்றத்திற்குத் தேர்வான முதல் தெற்காசிய வம்சாவளி பிரதிநிதியாக பியா தாண்டியா உருவெடுத்துள்ளார்.
