செய்திகள்

அமெரிக்க நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற இந்திய வம்சாவளி எம்.பி. சுஹாஸ் சுப்ரமணியம்!

அமெரிக்க நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற இந்திய வம்சாவளி எம்.பி. சுஹாஸ் சுப்ரமணியம்!

அமெரிக்காவில் நடைபெற்ற 2026ஆம் ஆண்டு இடைக்காலத் தேர்தலில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜனநாயகக் கட்சி வேட்பாளர் சுஹாஸ் சுப்ரமணியம் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். விர்ஜீனியா மாகாணத்தின் 10-வது காங்கிரஸ் தொகுதியில் போட்டியிட்ட அவர், குடியரசுக் கட்சி வேட்பாளர் டேவ் பெக்வித்தை தோற்கடித்து வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.

இந்தத் தேர்தலில் சுஹாஸ் சுப்ரமணியம் 63.16 சதவீத வாக்குகளையும், டேவ் பெக்வித் 34.66 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

40 வயதான சுஹாஸ் சுப்ரமணியம், அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா தலைமையிலான வெள்ளை மாளிகையில் தொழில்நுட்பக் கொள்கை ஆலோசகராகப் பணியாற்றியவர். 2019ஆம் ஆண்டு விர்ஜீனியா மாகாண சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், பின்னர் மாகாண செனட் உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.

2024ஆம் ஆண்டு அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்குத் தேர்வான இவர், தற்போது மீண்டும் வெற்றி பெற்றதன் மூலம் தனது இரண்டாவது இரண்டு ஆண்டு பதவிக்காலத்தைத் தொடர உள்ளார்.