ஓணம் ரிலீஸ் இல்லை… துல்கர் சல்மானின் ‘I Am Game’ எப்போது வெளியாகிறது? வெளியான புதிய அறிவிப்பு!

ஓணம் ரிலீஸ் இல்லை… துல்கர் சல்மானின் ‘I Am Game’ எப்போது வெளியாகிறது? வெளியான புதிய அறிவிப்பு!

துல்கர் சல்மான் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ஐ அம் கேம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தில் ஆண்டனி வர்கீஸ், மிஷ்கின், கயாடு லோஹர், கதிர், பார்த் திவாரி, சம்யுக்தா விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

RDX படத்தின் வெற்றிக்குப் பிறகு நஹாஸ் ஹிதாயத் இயக்கியுள்ள இப்படம், ஃபேண்டஸி த்ரில்லர் களத்தில் உருவாகியுள்ளது. முதலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆகஸ்ட் 20-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதிக திரையரங்குகள் மற்றும் சர்வதேச சந்தைகளில் படத்தை வெளியிடும் நோக்கில் ரிலீஸ் தேதி தற்போது மாற்றப்பட்டுள்ளது.

அதன்படி, ஐ அம் கேம் திரைப்படம் வரும் செப்டம்பர் 3, 2026 அன்று உலகம் முழுவதும் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இது துல்கர் சல்மானின் 40-ஆவது திரைப்படம் என்ற சிறப்பையும் பெற்றுள்ளது. அவரது சொந்த தயாரிப்பு நிறுவனமான Wayfarer Films தயாரித்துள்ள இப்படம், துல்கர் சல்மானின் திரைப்பயணத்தில் முக்கியமான மற்றும் பிரம்மாண்டமான படைப்புகளில் ஒன்றாக உருவாகியுள்ளது.

மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் என ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ள ஐ அம் கேம், ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *