புதுவையில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் LJK தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின்

நடைபெற்று முடிந்த புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் திரு. ஜோஸ் சார்லஸ் மார்டின் அவர்கள் தலைமையிலான லட்சிய ஜனநாயக கட்சி, தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து போட்டியிட்டது. கூட்டணியில் லட்சிய ஜனநாயக கட்சிக்கு காமராஜ் நகர் மற்றும் நெல்லித்தோப்பு ஆகிய இரு இடங்கள் ஒதுக்கப்பட்டது. இதில் காமராஜ் நகர் தொகுதியில் கட்சியின் தலைவரான ஜோஸ் சார்லஸ் மார்டின் போட்டியிட்டார்.

கடந்த ஏப்ரல் ஒன்பதாம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி மே 5-ஆம் தேதி அன்று நடைபெற்றது. மாலை முடிவுகள் வெளியான தருணத்தில் , லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் 16,592 வாக்குகள் பெற்று, தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் தேவதாஸை 10,205 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார். இது 2026 புதுவை சட்டப்பேரவை தேர்தலில் அதிகபட்ச வாக்கு வித்தியாசமாக அமைந்தது.

அவரது இந்த மகத்தான சாதனைக்கு கூட்டணி கட்சிகள் உட்பட பல்வேறு தரப்பினரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *