LJK தலைவருக்கு பிரான்சில் உற்சாக வரவேற்பு

LJK தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் தலைமையில் செயல்பட்டு வரும் லட்சிய ஜனநாயக கட்சி சமீப காலமாக வெளிநாடுகளிலும் தனது செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகிறது.

புதுச்சேரி அரசியல் குறித்து ஜெனிவா நகரில் கருத்துகள் பகிரப்பட்டதுடன், கடந்த மாதம் குவைத்தில் சிக்கி தவித்திருந்த ஒரு பெண்மணியை 12 மணிநேரத்திற்குள் அந்நாட்டிலிருந்த மீட்க LJK சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட காரைக்கால் மீனவர்களை சட்ட ரீதியான முயற்சிகள் மூலம் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்நிலையில் LJK தலைவர் ஜோஸ் சார்ல்ஸ் மார்டின் பிரான்ஸ் சென்றபோது அங்குள்ள புதுச்சேரி மக்கள் விமான நிலையத்தில் அவருக்கு உற்சாகமான வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து நடைபெற்ற சந்திப்பு நிகழ்ச்சியில் ஹுமர் பேக், சந்திரமௌலி, ராஜேஷ், இளங்கோ, பச்சையப்பன் மற்றும் அகில இந்திய எம்.ஜி.ஆர் பேரவை தலைவர் முருகன் பத்மநாபன் உள்ளிட்டோர் அவர் முன்னிலையில் லட்சிய ஜனநாயக கட்சியில் இணைந்தனர்.

இந்த நிகழ்வு வெளிநாடுகளில் வசிக்கும் புதுச்சேரி மக்களிடையே லட்சிய ஜனநாயக கட்சிக்கும் அதன் அரசியல் பயணத்திற்கும் நாடு விட்டு நாடு ஆதரவு அதிகரித்து வருவதை வெளிப்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *