`சியான் 63′!-இல் இணையும் இருமுகன்கள்!
விக்ரம் பிறந்தநாளை முன்னிட்டு அறிவிக்கப்பட்ட ‘சியான் 63’ படத்தை ஆனந்த் ஷங்கர் இயக்குகிறார். ‘இருமுகன்’க்கு பிறகு இருவரும் மீண்டும் இணைகிறார்கள்.
இந்த படம், குடும்பம் முழுவதும் ரசிக்கும் ஃபேமிலி ஆக்சன் திரில்லராக உருவாகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் தொடங்கியுள்ளது.
இப்படத்தில் ஊர்வசி, சம்யுக்தா ஹெக்டே, ரியா ஷிபு,எம். எஸ். பாஸ்கர், வி.டி.வி. கணேஷ், சுபாஷ் செல்வம் மற்றும் விஷ்ணு ஜி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
விக்ரமின் மாஸ் அம்சங்களுடன் அதிரடி காட்சிகள் கலந்த முழுமையான விருந்தாக ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

