உங்களுக்கு யாருடைய படங்கள் மிகவும் பிடிக்கும் முதலமைச்சரா? எதிர்கட்சித் தலைவரை?| `ஹார்டின்’ பட நடிகையின் நுணுக்கமான பதில்
சனந்த், மடோனா செபாஸ்டியன், இமையா நடித்து கிஷோர் குமார் இயக்கியுள்ள படம் `ஹார்டின்’. ஜூன் 26ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இப்படம் காதல் கதையாக உருவாகியுள்ளது.இந்நிலையில் இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் நடித்த நடிகை இமையா தங்கம் தென்னரசு மகள் ஆவர். அவர் பேசுகையில், “இது என்னுடைய முதல் படம். முதல் படம் என்பதாலேயே இது எனக்கு மிகவும் ஸ்பெஷல்.
இந்தப் படத்தில் எனக்கும் என்னைப் போன்ற பல புது முகங்களுக்கும் நடிக்க வாய்ப்பு அளித்த தயாரிப்பாளர் ரவீந்திரனுக்கு நன்றி.
இந்தப் படம் அழகானது. அனைவருடனும் எளிதாக தொடர்பு கொள்ளும் இந்தப் படத்தில் இடம்பிடித்திருக்கும் ஏதேனும் ஒரு விஷயம் உங்களைக் கவர்ந்துவிடும்.
இந்தப் படத்தின் மூலம் சனந்த் ஹீரோவாக அறிமுகமாகிறார்.
அவர், பக்கத்து வீட்டுப் பையன் போன்ற கேரக்டரில் நன்றாக நடித்திருக்கிறார். இந்தப் படம் ரசிகர்களுக்கு பிடிக்கும்” என்றார்.
செய்தியாளர்கள் கேள்வி கேட்டபோது, ”உங்கள் குடும்பம் அரசியல் பின்னணி கொண்டது, ’நீங்கள் சினிமாவுக்குச் செல்கிறேன்’ எனச் சொன்னதும் அவர்கள் என்ன சொன்னார்கள்” எனக் கேட்டதும், “சினிமாவுக்குப் போகவே வேண்டாம் எனச் சொன்னார்கள். ஆரம்பத்தில் அவர்களுக்கு இதில் விருப்பம் இல்லை. ஆனால் தொடர்ச்சியாக நான் முயற்சி செய்வதை பார்த்தபின், சரி என சம்மதித்தார்கள்” என்றார்.

”இப்போது இருக்கும் முதலமைச்சரும் சினிமாவிலிருந்து வந்தவர், எதிர்க்கட்சித் தலைவரும் சினிமாவிலிருந்து வந்தவர், சின்ன வயதில் யார் படத்தை விரும்பிப் பார்ப்பீர்கள்” என்றதும் “நான் சூர்யா சார் ஃபேன்” என்றார் இமயா.
நுணுக்கமாக கையாண்ட இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.