வெளியாகி இருக்கும் ராமாயண ட்ரைலர் சீதையாய் நடித்திருக்கும் சாய் பல்லவிக்கு என்ன சிக்கல்?

வெளியாகி இருக்கும் ராமாயண ட்ரைலர்

கடந்த ஜூலை July 30 அன்று ராமாயண ட்ரைலர் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பையும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பையும் உருவாக்கியுள்ளது. அதுமட்டுமல்லாமல், சில விமர்சனத்திற்கும் உள்ளாகி இருக்கிறது . இந்த படம் ட்ரைலரில் சாய் பல்லவி சீதையாக அறிமுகக் காட்சி வைக்கப்பட்டு இருந்தது. அதில் சாய் பல்லவியின் பின்னால் நின்று கொண்டிருந்த பெண்ணின் புகைப்படம் வைரலாகி அவர்தான் சீதையின் கதாபாத்திரத்திற்கு தேர்ந்தவராக இருப்பார். என்றும் சாய் பல்லவியை விட அவர் மிகவும் நேர்த்தியாக, வசீகரமாக இருப்பதாகவும் பலர் கருத்துக்களை ஊடகங்களில் பரப்பி வந்தனர்.

அதுமட்டுமல்லாமல் “தி ஓஜி சீதா” என்று முன்னர் வெளிவந்த திரைப்படத்தில் நடித்திருந்த நயன்தாராவையும் வைத்து இவர்தான் சரியான தேர்வு என்றும் ஒருபக்கம் சிலர் குறிப்பிட்டு வந்தனர்.

அதே சமயம் சிலர், அழகை வைத்து மட்டும் திறமைக்கான வாய்ப்பை அளிக்கக் கூடாது பல படங்களில் இருக்கும் கதாபாத்திரங்களில் சாய்பல்லவி என்ற ஒரு நடிகையை தூக்கிவிட்டால் அந்த கதை ஒன்றுமே இல்லாதது போல் இருக்கும். திறமையால் கிடைக்கும் வாய்ப்புகளை உதாசினமாக பேசாதீர்கள் என்றும் சாய்பல்லவியின் தீவிர ரசிகர்கள் தங்களது கருதுக்களை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *