தமிழ்நாடு அரசியலில் மீண்டும் திரைத்துறையின் ஆதிக்கம் | தனுஷ் | அரசியல் கட்சி

தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் திரைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு எப்போதும் தனித்துவமான இடம் இருந்து வருகிறது. முன்னாள் முதலமைச்சர்களான மு.கருணாநிதி, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் திரைத்துறையுடன் நெருங்கிய தொடர்புடையவர்களாக இருந்து, பல ஆண்டுகள் தமிழகத்தின் முதலமைச்சர் பதவியை அலங்கரித்தனர்.
குறிப்பாக, தனிக்கட்சி தொடங்கி தனது முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்த எம்.ஜி.ஆரின் அரசியல் பயணம், திரைத்துறையைச் சேர்ந்த பலருக்கும் அரசியலில் களமிறங்கும் உத்வேகத்தை ஏற்படுத்தியது.
அதேவேளையில், சிவாஜி கணேசன், பாக்யராஜ், டி.ராஜேந்தர், சரத்குமார், கமல்ஹாசன் உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்கள் அரசியலில் களமிறங்கியபோதும், எதிர்பார்த்த அளவிலான வெற்றியைப் பெற முடியவில்லை.

இந்தச் சூழலில், நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கி, தனது முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்று தமிழகத்தின் முதலமைச்சராக உருவெடுத்துள்ளார். இதன் மூலம், நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ்நாட்டின் அரசியல் களம் மீண்டும் திரைத்துறையை நோக்கி திரும்பியிருப்பது கவனம் பெற்றுள்ளது.
இதன்மூலம், சட்டமன்றத் தொகுதி வாரியாக நற்பணி இயக்கத்தை விரிவுபடுத்துவதுடன், உறுப்பினர் சேர்க்கையையும் அதிகரிக்க தனுஷ் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அடுத்தகட்டமாக, தமிழ்நாடு முழுவதும் 40-க்கும் மேற்பட்ட மாவட்டங்களாகப் பிரித்து மாவட்டத் தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இந்தியா முழுவதும் 55 தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக இயக்கத்தை மேலும் விரிவுபடுத்த தனுஷ் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

