மஞ்சிமா மோகனின் அசத்தல் மேக்ஓவர்.. புதிய லுக்கில் வைரலாகும் போட்டோஷூட்!
‘ஒரு வடக்கன் செல்ஃபி’, ‘அச்சம் என்பது மடமையடா’, ‘FIR’, ‘களத்தில் சந்திப்போம்’, ‘தேவராட்டம்’ மற்றும் ‘சுழல் 2’ உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களிடம் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் நடிகை மஞ்சிமா மோகன்.
ஏற்கனவே உடற்பயிற்சி செய்து அவ்வப்போது காணொளி வெளியிட்டு வந்த அவர் உடல் நலம் கருதி எடையைக் குறைக்கப்போவதாக கூறி இருந்தார்.
சில காலமாக திரையுலகில் இருந்து விலகியிருந்த மஞ்சிமா மோகன், தற்போது புதிய படங்களுடன் மீண்டும் கவனம் ஈர்க்க தயாராகி வருகிறார். இதற்காக தனது தோற்றத்தையே முற்றிலும் மாற்றி புதிய லுக்கிற்கு மாறியுள்ளார்.
குறிப்பாக, தனது உடல் எடையை கணிசமாகக் குறைத்து, ஸ்லிம் மற்றும் ஃபிட்டான தோற்றத்தில் மஞ்சிமா மோகன் வெளியிட்டுள்ள புதிய போட்டோஷூட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
அவரது இந்த புதிய மேக்ஓவர் மற்றும் மாஸான கெட்டப் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளதுடன், மஞ்சிமா மோகனின் அடுத்தடுத்த திரைப்படங்கள் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.
புதிய தோற்றத்தில் மஞ்சிமா மோகனை பார்த்த ரசிகர்கள், அவரது இந்த மாற்றத்தை சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர்.

