‘பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்ட’ விரிவாக்கத்தை முதல்வர் சி. ஜோசப் விஜய் தொடங்கி வைக்க உள்ளார்.
நாளை (செப்டம்பர் 22) சென்னையில் திருவான்மியூரில் உள்ள காந்திகிராமம் நடுநிலைப் பள்ளியில் காலை 8.30 மணியளவில் தொடக்க விழா நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கும் திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது. சுமார் 15.30 லட்சம் மாணவர்கள் கூடுதலாக பயன்பெற உள்ளனர்.15,454 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் திட்டத்தின் கீழ் வரும். விரிவாக்கத்திற்காக ₹217.63 கோடி கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
முதல்வர் வழங்கிய அறிவுறுத்தல்கள்
காலை உணவு தயாரிக்கும் சமையல் கூடங்கள் மற்றும் உணவு பரிமாறும் இடங்கள் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பராமரிக்கப்பட வேண்டும் என்றும், மாணவர்களுக்கு சூடான, சுவையான, உரிய அளவிலான மற்றும் ஊட்டச்சத்து மிகுந்த உணவு வழங்கப்பட வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தியதாக அரசு செய்திக்குறிப்பை மேற்கோளிட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு வகையான உணவுகளை வழங்குவதற்கான மெனுவை[ MENU]த் தயாரிக்க சிறப்புக் குழு அமைக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
இந்தத் திட்டத்தின் பெயர் “முதல்வரின் காலை உணவுத் திட்டம்” என்பதிலிருந்து “பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்” என மாற்றப்பட்டது

