ரூ.150 கோடி செலவில் மஹாவீர் கர்ணா! ராகவா லாரன்ஸின் அடுத்த பிரம்மாண்டம்

ரூ.150 கோடி செலவில் மஹாவீர் கர்ணா! ராகவா லாரன்ஸின் அடுத்த பிரம்மாண்டம்

இதிகாசக் கதைகளில் முக்கியமான கர்ணனின் கதையை மையமாகக் கொண்டு புதிய பிரம்மாண்ட திரைப்படம் உருவாகிறது. ‘மஹாவீர் கர்ணா’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் கர்ணன் கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கிறார். படத்தை ரமேஷ் வர்மா இயக்குகிறார்.

படத்திற்காக பிரம்மாண்டமான சிறப்பு அரங்குகள் அமைக்கப்படுவதுடன், புராண காலத்தை கண்முன் நிறுத்தும் வகையில் கலை வடிவமைப்புகள் உருவாக்கப்பட உள்ளன. மேலும், பிரமாண்டமான போர்க்காட்சிகள் மற்றும் உலகத்தரமான VFX தொழில்நுட்பம் ஆகியவை படத்தின் முக்கிய அம்சங்களாக இடம்பெற உள்ளன.

மொத்தத்தில் ரசிகர்களுக்கு பிரம்மாண்டமான காட்சி விருந்தை வழங்கும் வகையில் ‘மஹாவீர் கர்ணா’ உருவாக உள்ளது.

சுமார் ரூ.150 கோடி பொருட்செலவில் தயாராகும் இந்தப் படம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னடம் ஆகிய 5 மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாக உள்ளது.

கர்ணனின் வீரமும், இதிகாசப் பின்னணியும் பிரம்மாண்டமான திரை அனுபவத்துடன் இணைக்கப்பட உள்ளதால், ராகவா லாரன்ஸின் திரைப்பயணத்தில் முக்கியமான படமாக ‘மஹாவீர் கர்ணா’ அமைய உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *