ஈரான் போர் விலைவாசி உயர்வே தேர்தல் தோல்விக்கு காரணம் – ட்ரம்ப் ஒப்புதல்!
அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் குடியரசுக் கட்சி பின்னடைவைச் சந்தித்த நிலையில், தேர்தல் தோல்விக்கு ஈரான் போரும் அதன் காரணமாக ஏற்பட்ட எரிபொருள் விலை உயர்வும் முக்கிய காரணங்களில் ஒன்று என்பதை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஒப்புக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், ஈரான் போர் காரணமாக பெட்ரோல் விலை உயர்ந்தது குடியரசுக் கட்சியின் தேர்தல் முடிவுகளைப் பாதித்ததாகத் தெரிவித்துள்ளார். துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், தேர்தல் தோல்விக்கு ஈரான் போரே காரணம் எனக் குறிப்பிட்டிருந்த நிலையில், ட்ரம்ப்பும் போரின் தாக்கத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
இருப்பினும், ஈரான் மீது ராணுவ நடவடிக்கை எடுத்த முடிவில் தனக்கு எந்த வருத்தமும் இல்லை என ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மீண்டும் இதுபோன்ற சூழல் ஏற்பட்டாலும் அதே முடிவையே எடுப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதைத் தடுப்பதற்காக இந்த நடவடிக்கை அவசியமானது என்றும், நீண்டகால பாதுகாப்பைக் கருத்தில் கொண்டே போர் தொடங்கப்பட்டதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
இதற்கிடையே, அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கட்டுப்பாட்டைப் பெற்றுள்ளது. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஈரான் போர் மற்றும் அதன் பொருளாதார விளைவுகள் அமெரிக்க அரசியலில் முக்கிய விவாதமாக மாறியுள்ளன.
